500 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் தொடக்கம்
ஈரோடு, அக்.8-
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி பாரத பிரதமரின் பராமரிப்பு நிதியின் மூலம் (PM care Fund) நிமிடத்திற்கு 500 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிராணவாயு உற்பத்தி மையத்தினை துவக்கி வைத்தார்.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா., முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி , மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையின் சார்பில், பாரத பிரதமரின் பராமரிப்பு நிதியின் மூலம் நிமிடத்திற்கு 500 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பிராணவாயு உற்பத்தி மையத்தினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்ததாவது,
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பாரத பிரதமரின் பராமரிப்பு நிதியின் மூலம் நிமிடத்திற்கு 500 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜகளை உற்பத்தி செய்யும் 2 கலன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் DRDO மூலமாக பெறப்பட்டு, LNT நிறுவனத்தின் மூலம் நிறுவப்பட்டு, இந்த யூனிட்டிற்கு தேவையான கட்டிட அமைப்புகள் NHAI மூலம் பணிகள் நடைபெற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த அலகு மூலம் தயாரிக்கப்படும், 10 லிட்டர் ஆக்ஸிஜன் குறைந்த பட்சம் 100 நோயாளிகளுக்கு பயன்படுத்தும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்ஸிஜன் 96 சதவீதம் தூய்மை தன்மை கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து, பெருந்துறை அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பாரத பிரதமரின் பராமரிப்பு நிதியின் மூலம் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் கொள்ளளவு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஒரு கலன் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பாரத பிரதமர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் (குடும்ப நலம்) மரு.ராஜசேகர் உட்பட மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments