Breaking News

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அடிக்கல் நாட்டு விழா

காஞ்சிபுரம், அக். 28 -

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் புதியதாக நிழற்குடை அமைக்க சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி., எழிலரசன் அடிக்கல் நாட்டினார்.

காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக மெகா நிழற்குடை அமைக்க வேண்டும் என, பொது மக்கள் காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கும், எம்.எல்.ஏ., எழிலரசனுக்கும் கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து காஞ்சிபுரம் சட்ட மன்ற பொது நிதியில் இருந்து 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் சென்னை பஸ்கள் நின்று செல்லும் இடத்தில் 6 மீட்டர் உயரத்திற்கு பயணிகள் நிழற்குடை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. 

இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி., எழிலரசன் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். மாநகராட்சி ஆணையர் லெட்சுமி முன்னிலை வகித்தார். 

பொறியாளர் கணேசன், உதவி பொறியாளர் சரவணன், காஞ்சி தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சி.வி.எம்.பி., சேகர்,  காஞ்சிபுரம் நகர தி.மு.க., செயலாளர் சன் பிராண்டு ஆறுமுகம்,  தி.மு.க., நிர்வாகிகள் எம்.எஸ்.சுகுமார்,  ஜெகன்நாதன், சந்துரு, கமல், குமரேசன், மாதவன், குமரவேல்,  கிரி, யுவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர். 

இதேபோல், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அண்ணா பூங்கா வளாகத்தில் இளைஞர்களின் பயன்பாட்டிற்காக ரூ. 25 லட்சத்தில் உடல் பயிற்சிக் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 

இந்த நிகழ்சிக்கு சட்ட மன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி., எழிலரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments