Breaking News

அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோவிலில் அரசின் சாதனைகளின் புகைப்பட கண்காட்சி

காஞ்சிபுரம், அக். 28-

காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோவிலில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனைகளை பக்தர்களும் - பொது மக்களும் பார்வையிட்டனர்.

தமிழகத்தில் புதிய ஆட்சி கடந்த மே மாதம் பொறுப்பு ஏற்றது. இந்த ஆட்சி கடந்த ஆறு மாதங்களில் செய்த சாதனைகள் குறித்த, புகைப்படங்களை  செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சேகரிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை அனைத்து தரப்பு மக்களும் பார்த்து தெரிந்து கொள்ளும்  வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் உள்ள அருள்மிகு தட்சிணாமூர்த்தி திருக்கோயிலில்,  இந்த  சாதனை விளக்க புகைப்படங்களை  கண்காட்சியாக இன்று பக்தர்கள், பொது மக்களுக்காக வைக்கப் பட்டன. 

இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசின் சாதனை விளக்கப்படங்களை பார்வையிட்டு சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கணேசன், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களான சதீஷ்குமார், பெருமாள் ஆகியோர் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments