இளைஞர் காங்கிரஸ் 2021 தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம்
ஈரோடு மாவட்டத்தின் இளைஞர் காங்கிரஸ் 2021 தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது...
இளைஞர் காங்கிரஸ் 2021 தேர்தல் சம்பந்தமாக ஈரோடு மாநகர் மற்றும் வடக்கு மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் இன்று (28/10/2021) ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமையில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் ஜெ.சுரேஷ் வரவேற்புரையாற்றினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரசின் மேலிட பொறுப்பாளர்(Z R O) ஒடிசாவை சேர்ந்த சாம்ராட் கலந்து கொண்டு IYC App மூலமாக இளைஞர் காங்கிரசில் சேர்வது எப்படி, தேர்தலில் நிற்பது எப்படி, வாக்களிப்பது எப்படி என்பதை விளக்கினார். ஈரோடு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பா.உதயகுமரன், இரண்டாம் மண்டல தலைவர் ஆர். விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பா. ராஜேஷ் ராஜப்பா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் முகமது அர்சத், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி. எம். ராஜேந்திரன், ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் கார்த்தி, மொடக்குறிச்சி வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி.கே.செந்தில் ராஜா, பொதுச் செயலாளர் கராத்தே யூசுப், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சேவா தளம் தலைவர் எஸ். முகமது யூசுப், தம்பி கார்த்திக், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே.என். பாஷா, ஒன்றாம் மண்டல தலைவர் ஆர்.எஸ்.ஐ அய்யூப் அலி என்கிற அம்புலி, ஒன்றாம் மண்டல பொதுச் செயலாளர் டி.எம்.ஐ சபீர் அலி, சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் எம். ஜவஹர் அலி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் எஸ். சி. பிரிவு தலைவர் கே.பி.சின்னசாமி, மாவட்ட செயலாளர் கதிரேசன், மாவட்ட நிர்வாகிகளான கே.ஜே.டிட்டோ, சிவா என்கிற சிவகுமார், சூரம்பட்டி முன்னாள் மாமன்ற உறுப்பினர் சாம்ராட் அசோக் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டனர். நிறைவில் ஜனனி பள்ளிகளின் தாளாளர் செந்தூர் ராஜகோபால் நன்றியுரையாற்றினார்.
No comments
Thank you for your comments