Breaking News

சுதந்திர இயக்கம் நடத்திய திருக்குறள் திறன் அறியும் போட்டி பரிசளிப்பு விழா

தருமபுரி, அக்.8-

தமிழகம் முழுவதும் சமூக நல சேவைகள் செய்து வரும் சுதந்திர இயக்கம் உலக பொதுமறை நூல் திருக்குறள் 1330 குறட்பாக்களை அஞ்சலட்டையில் எழுதும் மாணவர்களுக்கான திறன் அறியும் போட்டியை மாநில அளவில் நடத்தியது அதன் பரிசளிப்பு விழா அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று சேலம் குகை பகுதியில் அமைந்துள்ள சுதந்திர இயக்கத்தின் மாநில தலைமை நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. 

விழாவிற்கு மாநில தலைவர் எஸ். காமராஜ் தலைமை தாங்கினார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சிவநேசன், ஐய்யந்துரை, சுரேஷ் ஜெயச்சந்திரன் முன்னிலை வகிக்க ரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினார்.

குறள்நெறி வாழ்க்கை என்ற தலைப்பில் பேராசிரியர் முனைவர் வே. சங்கரநாராயணன் சிறப்புரையாற்றினார். திருக்குறள் மாமணி நல்லாசிரியர் மாமணி பொன்ரேகா திருக்குறள் மாமணி த.புனிதவள்ளி, கவிஞர் சாந்தி சுப்பிரமணியன், வாழ்த்துரை வழங்கினார்கள். தமிழகம் முழுவதும் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், நெய்வேலி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை, தென்காசி, திருநெல்வேலி, நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயம் மற்றும் நற்சான்றிதழ்களை செங்கை பிரஸ் கிளப் மாநில தலைவர் டாக்டர். ஆர். ரவிச்சந்திர பாபு வழங்கினார்.   குலுக்கல் முறையில் மூன்று மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசு ரூ.5000 இரண்டாம் பரிசு ரூ.3000 மூன்றாம் பரிசு ரூ. 2000-த்தை  சேலம் வழிவிடு முருகன் திருக்கோவில் அரங்காவலர் பிரபுராம் வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஐசிஐசிஐ வங்கி பாலகுமார் வழக்கறிஞர் ஆனந்த் பாபு மற்றும் ஆசிரிய பெருமக்கள் பலர் கலந்து கொண்டனர். சுதந்திரா இயக்கத்தின் கல்விப்பிரிவு மாநில செயலாளர் நல்லாசிரியர் முத்துமாரய்யன் விழாவை தொகுத்து வழங்கினார். 

🔥Also Read 👆தினமணி செய்தியாளர் கோபியின் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தலைவர் டாக்டர் கா.குமார் இரங்கல் 

 மாநில பொருளாளர் மீனா விழாவை ஒருங்கிணைக்க,  விழா ஏற்பாடுகளை நிர்வாக இயக்குனர் ரமேஷ் மற்றும் துணைப் பிரிவு நிர்வாகிகள் தாரை வேலு, ராஜேந்திரன், அழகுசுந்தரம், சாந்தகுமாரி, விஜயலட்சுமி, கல்பனா, ஸ்ரீஜா, ஜெயந்தி, விஜயா, ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். விழா நிறைவில் லியோ நன்றி உரையாற்றினார்.

No comments

Thank you for your comments