தனியார் பள்ளிகளில் ஆய்வு
திருவள்ளூர், அக்.8-
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசுப் பள்ளிகள் மருத்துவமனைகள் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் ஆவடி மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார் அவர்களின் உத்தரவின் பெயரில்,
பட்டாபிராம் தன்டுரை பகுதியில் எஸ்.ஐ பிரகாஷ் அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் நிர்க்கும் பள்ளிகள் அரசு கட்டிடங்கள் மொட்டை மாடியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் ஆயில் மற்றும் டீசல் ஊற்றி டெங்கு கொசு உருவாகாமல் தடுக்கும் விதமாக கொசு மருந்தும் அடித்து வருகின்றனர்.
இது வரும் முன் காப்போம் திட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் ஆவடி மாநகராட்சி நன்றியை தெரிவித்தனர்.


No comments
Thank you for your comments