Breaking News

நண்பர்களுக்குள் மதுபோதையில் தகராறு விருத்தாசலத்தில் இளைஞர் குத்தி கொலை

கடலூர், அக்.10:

விருத்தாசலத்தில் நண்பர்களுக்குள் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலையானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் தென்னூர் அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஏசுராஜ் மகன் அருண் ராஜ் (25). ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ஏசுராஜ் வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் வாகனத்தின் காவலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். 

விருத்தாசலத்தில் தங்கியிருந்தவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் மகனின் மோசமான நட்பு வட்டம் காரணமாக சொந்த ஊருக்கு சென்று விட்டார்.

இந்நிலையில், தாயுடன் விருத்தாசலத்தில் வசித்து வந்த அருண் ராஜை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் நபிஸ் சனிக்கிழமை இரவு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு, நபிஸ், மனோஜ், பிரேம்குமார், கலைச்செல்வன் அருண்ராஜ் உள்ளிட்டோர் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறில்  அருண்ராஜை கத்தியால் குத்திய தாகவும் ரத்தம் சொட்டிய நிலையில் இருந்தவரை காப்பாற்ற மற்ற நண்பர்கள் வீட்டில் இருந்து மெயின் சாலைக்கு அருணை தூக்கி வந்து சாலையில் படுக்க வைத்துள்ளனர். 

பின்பு, 108 ஆம்புலன்சில் ஏற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதனையடுத்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில், பிரேம்குமார், மனோஜ், கலைச்செல்வன், மற்றும் அருண்ராஜ் ஆகியோர் ஒன்றாக படித்த நண்பர்கள் என்பதும்  சென்னையைச் சேர்ந்த  பெண் ஒருவருடன் பிரேம்குமார் , அருண்ராஜ் இருவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் அதில் ஏற்பட்ட மனக்கசப்பில் கொலை நடந்தது தெரிய வந்தது.  மனோஜ், கலைச்செல்வன் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments