Breaking News

கொள்ளையன் 30 மணி நேரத்திற்கு பின் 'என்கவுன்டரில்' சுட்டுக் கொலை!

காஞ்சிபுரம், அக். 11 -

ஸ்ரீ பெரும்புதூர் அருகே பெண்ணின் கழுத்தில் இருந்த ஐந்தரை சவரன் தாலி சரடை துப்பாக்கி முனையில் பறித்து சென்ற சென்ற கொள்ளை கும்பளை சேர்ந்த ஒருவரை, தனிப்படை போலிஸார், ஏரியில் என்கவுன்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். இதனால், பென்னளூர் பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

நைம் அக்தர்  என்ற கொள்ளையனை போலிஸார் சுற்றி வைத்து கைது செய்தனர். ஏரியில் பதுங்கியள்ள முர்தஷா உட்பட மூன்று கொள்ளையர்களை போலிஸார் தேடி வருகின்றனர். 

இந்த கொள்ளையர்கள் அனைவரையும் சுற்றி வைத்து பிடிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் சரக துணைத் தலைவர் சத்தியப்பிரியா, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் ஆகியோர் உத்தரவின் பேரில், தனிப் படை அமைக்கப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட போலிஸார் பென்னளூர் ஏரியை சுற்றி வளைத்தனர்.

30 மணி நேரத்திற்கு பிறகு ஒரு கொள்ளையனை என்கவுன்டர் மூலம் சுட்டனர். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த கொள்ளையன் சம்பவ இடத்திலேயே இறந்து போனான்.

இவரது உடலை மீட்ட போலிஸார், பிரேத பரிசோதனைக்காக  ஸ்ரீ பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நைம் அக்தர் என்ற கொள்ளையனை சுற்றி வளைத்து பிடித்தனர். முர்தஷா என்ற கொள்ளையன் உட்பட மூவரை தேடி வருகின்றனர். 

போலிஸார் தொடர்ந்து பென்னளூர் ஏரியில் முகாமிட்டு மீதமுள்ள மூன்று கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.


No comments

Thank you for your comments