Breaking News

அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

விருத்தாசம்:

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கம் சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் வட்டத் தலைவர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் மற்றும் மாவட்ட பொருளாளர் கண்ணன், துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட துணை தலைவர் வேல்முருகன், வட்ட செயலாளர் வேல்சாமி, வட்ட பொருளாளர் சண்முகம், ஊடகப்பிரிவு செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மனோகரன் கலந்து கொண்டு சங்கம் வளர்ச்சி குறித்து உரையாற்றினார் முன்னதாக மாவட்ட செயலாளர் கார்மேகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இதில் கிராம உதவியாளர் B கிரேடு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் அரசு வழங்க வேண்டும் 2003-க்கு பின் பணியில் சேர்ந்த பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு CPS பணம் அவர்கள் பணிபுரியும் அலுவலகத்தில் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது CPS பணம் இனி பிடித்தம் செய்ய வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் இடம் இருந்து அறிவிப்பு வந்துள்ளது அது சம்பந்தமாக கருத்து கேட்கப்பட்டுள்ளது

உதவியாளர்கள் கல்வித்தகுதி அடிப்படையில் 10 ஆண்டுகள் பணி புரிந்தவர்களுக்கு பணி உயர்வு வழங்கப்படுகிறது ஆறு ஆண்டுகள் பணி செய்தால் போதும் என்ற அரசாணையை தளர்ச்சி வழங்க வேண்டும்

வருவாய் நிர்வாகத்தில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் என்னென்ன பணிகள் செய்யவேண்டும் என்ற புதிய பணி விதிகளை அரசு உருவாக்கி அரசு ஆணையாக வெளியிட அரசை கேட்டுக் கொள்கிறது

கடலூர் மாவட்டத்தில் மாவட்ட தலைவர் பதவி காலியாக உள்ளதால் புதிய தலைவர் தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது முடிவில் மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார் இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராம உதவியாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

No comments

Thank you for your comments