நள்ளிரவில் ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்த மர்ம நபர்கள்... !
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் நள்ளிரவு மர்ம நபர்களால் ஒருவர் ஓட ஓட விரட்டி பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் ஓரிக்கை கணேஷ் நகர் பகுதியில் வசித்துவரும் ராமதாஸ் என்பவரின் மகன் மோகன் வயது 25. ஒரகடத்திலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
![]() |
உயிரிழந்த மோகன் |
இந்நிலையில் நேற்று தனது வீட்டில் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு, தனது நணபர் பாலாஜி என்பவருடன் மது அருந்தி விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு நள்ளிரவு இருவரும் மிலிட்டரி ரோடு சத்யா நகர் அருகே வந்து கொண்டிருந்த போது மர்ப நபர்கள் சிலர் இருவரையும் பயங்கர ஆயுதங்களால் சராமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் இருவரும் படுகாயங்களுடன் இருந்துள்ளனர். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் தாலுகா காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மோகனை மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனையெடுத்து அவரது உடலானது உடற்கூறு ஆய்வுக்காக பிரேத பரிசோதனே கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் உடன் இருந்த அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலாஜி தலை மற்றும் காதுகளில் படுகாயங்களுடன் தீவிர சகிச்சை பரிவில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் சம்பவ இடத்தினை நேரில் ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ள பாலாஜிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாலுகா காவல்துறையினர் பூபாலன், மணிகண்டன் இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் மருத்துவமனையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
No comments
Thank you for your comments