குடிநீருடன் கழிவுநீர் அவலம்
வேலூர், அக்.10-
பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டும் அதிகாரிகளின் மெத்தனத்தால் வேலூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. குடிநீருடன் கழிவுநீர் கலந்துவந்ததால் மாநகராட்சி உதவி ஆணையாளரை பொதுமக்கள் இன்று முற்றுகையிட்டனர்.
வேலூர் மாவட்டம் வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் நைனியப்பன்தெரு, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் வேலூர் பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெள்ளம் போல் ஓடுகிறது. இருப்பினும் மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கால் குடிநீர் பிரச்சனை அதிகளவில் நிலவி வந்தது மேலும் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராமல் பொதுமக்கள் அவதிபட்டனர் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், விசிகவின் சார்பில் பல முறை புகார் மனு கொடுத்தும் மற்றும் தொலைபேசி மூலம் புகார் அளித்தும் எந்தவித பலனும் அளிக்கவில்லை.
ஒரு மாதம் கழித்து இன்று குடிநீர் விடப்பட்டது. ஆனால் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இத்தகவலறிந்து வந்த மாநகராட்சி உதவி ஆணையர் மதிவாணன் பொதுமக்களை சமரசம் செய்தார். ஆனால் பொதுமக்கள் ஆணையாளரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது..
மேலும் இனி வரும் காலங்களில் முறையாக குடிநீர் வழங்கப்படும் என்று பொது மக்களுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் அப்பகுதியிலிருந்து கலைந்து சென்றனர்
பாலாறு மற்றும் பொன்னை ஆற்றில் வரும் தண்ணீரை சேமிக்கவும் அதனை முறையாக வழங்கவும் ஆறுகளில் தடுப்பணைகளை கட்ட வேண்டுமென பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments
Thank you for your comments