Breaking News

அராஜகம் செய்யும் ஆளும் கட்சி எம்பிகள்! என்ன நடக்கிறது? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை ஆவேச கேள்வி

கடலூர்:

நெல்லை திமுக எம்.பி பாஜக பிரமுகர் மீது தாக்குதல் நடத்தி உள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இப்போதுதான் கடலூர் எம்பி மீது கொலைக்குற்றம்...  அதற்குள் திருநெல்வேலி திமுக எம்பி ஞானதிரவியம் நேரடியாக பாஜக நிர்வாகி ஆவரைகுளம் பாஸ்கரை கொல்ல முயற்சி! என்ன நடக்கிறது? என்று  முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை ஆவேச கேள்வி எழுப்பி உள்ளார்.

கடலூர் திமுக எம்பி ரமேஷுக்குச் சொந்தமான முந்திரி கம்பெனியில் ஊழியர் கோவிந்தராஜ் மர்ம மரணம் அடைந்த வழக்கில் எம்பி யின் ஊழியர்கள் 5 பேரை கைது செய்தனர்.  சிபிசிஐடி போலீசார். எம்பி ரமேஷ் தலைமறைவாகியிருக்கிறார். அவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சிபிசிஐடி போலீசார் திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரின் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் 5 பேர் சேர்ந்து கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்தது அம்பலமானது. 

இதனைத் தொடர்நது சிபிசிஐடி போலீசார் ஊழியர்கள் 5 பேரை கொலை வழக்கில் கைது செய்தனர். எம்.பி ரமேஷ் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எம்பி ரமேஷ் தலைமறைவாகியிருக்கும் நிலையில் அவரை போலீசார் தேடி வருகிறார்கள். 

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது நெல்லை திமுக எம்.பி பாஜக பிரமுகர் மீது தாக்குதல் நடத்தி உள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 12வது ஒன்றிய கவுன்சில் பகுதியில் பாஜக நிர்வாகி பாஸ்கர் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டதாக பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

பாஜக பிரமுகர் பாஸ்கர் தாக்கப்பட்ட நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பாஸ்கர் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

சட்டத்தை கையில் எடுத்து சரமாரி தாக்குதல் & அராஜகம் செய்யும் ஆளும் கட்சி எம்பி கள்! 

இப்போதுதான் கடலூர் எம்பி மீது கொலைக்குற்றம்... 

அதற்குள் திருநெல்வேலி திமுக எம்பி ஞானதிரவியம் நேரடியாக பாஜக நிர்வாகி ஆவரைகுளம் பாஸ்கரை கொல்ல முயற்சி! என்ன நடக்கிறது?  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று ஆவேசாமாக கேள்வி எழுப்பி உள்ளார்.


No comments

Thank you for your comments