Breaking News

பட்டியல் இனத்து பெண் வேட்பாளர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கப்பதிவு

ஆம்பூர், அக்.9 -

ஆம்பூர் அருகே நாயக்கனேரி பஞ்சாயத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பட்டியல் இனத்து பெண் வேட்பாளர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு மையத்திற்கு வந்து வாக்களித்தார்.


ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி ஊராட்சி மலை கிராமத்தில் 3440 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு  பட்டியலின பெண் (ஆதிதிராவிடர் வகுப்பைசார்ந்த) வேட்பாளர் போட்டியிட தேர்தல் ஆணையம் இடம் ஒதுக்கியது.

அன்று முதல் மலை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து வந்தனர். இந்நிலையில் அந்த ஊராட்சியில் உள்ள  9- வார்டுகளில் ஒருவர்கூட போட்டியிடாமல் தேர்தலை புறக்கணித்தனர்.

அதேபோல் அப்பகுதியில் உள்ள ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்ட இந்துமதி,  திமுக சார்பில் போட்டியிட்ட விஜயலட்சுமி மற்றும் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட முனியம்மாள் ஆகியோர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் கிராமமக்கள் எதிர்ப்பால் 3 வேட்பாளர்களும்  வேட்பு மனுக்களை கடைசி நாளான 25ஆம் தேதி வாபஸ் பெற்றனர். 

இந்நிலையில் கிராம மக்களின் எதிர்ப்பை மீறி போட்டியிட்ட பெண் வேட்பாளர் இந்துமதி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காமனூர்தட்டு பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு மையத்தில் தனது கணவர் பாண்டியன் உடன் வந்து வாக்கினை செலுத்தினார்.

பின்னர் போலீஸ் வேனில் பாதுகாப்புடன் வீட்டிற்கு திரும்ப அழைத்துச் செல்லப்பட்டனர் அந்த தருணம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை நிலவச் செய்தது

No comments

Thank you for your comments