Breaking News

நாயக்கனேரி ஊராட்சி மலை கிராமத்தில் தேர்தல் புறகணிப்பு...! - மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை..

 ஆம்பூர், அக்.9-

ஆம்பூர் அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்த மலைகிராம மக்களிடம், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை.. தேர்தல் எங்களுக்குத் தேவையில்லை என  கிராம மக்கள் திட்டவட்டமாக கூறினார்கள்.

ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நாயக்கனேரி ஊராட்சி மலை கிராமத்தில் 3440 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் ஊராட்சிமன்ற தலைவர் பதவி பட்டியலின பெண் (ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்த) வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் இடம் ஒதுக்கியது. அன்று முதல் மலை கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து வந்தனர். 

இந்நிலையில் அந்த ஊராட்சியில் உள்ள 9- வார்டுகளில் ஒருவர்கூட போட்டியிடாமல் தேர்தலை புறக்கணித்தனர். அதே போல ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 3 பேர் வாபஸ் பெற்றனர்.



மேலும் நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட காமனூர் தட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரது மனைவி பட்டியில் சமுதாயத்தைச் சார்ந்த இந்துமதி கடைசி நேரத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அந்த வேட்பு மனுவையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. 

அந்தப் பெண்ணும் போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் ஆத்திரமடைந்த ஊர் மக்கள் பல்வேறு வகையில் தேர்தலை புறக்கணித்து  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மாதனூர்  ஊராட்சி ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது.

இதில் வாக்களிக்க நாயக்கனேரி அமைக்பட்டுள்ள ஆறு வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் காலை முதல் ஆறு வாக்குச்சாவடி மையங்களுக்கு அப்பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் யாரும் வாக்களிக்க முன்வராமல் உள்ளதால் வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

தற்போது மதியம் 2 மணி நிலவரப்படி  நாயக்கனெரி ஊராட்சிக்கு உட்பட்ட காமனூர்தட்டு வார்டு பகுதியில்  17 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

பொதுமக்கள் 100% பாதுகாப்பான முறையில் வாக்களிக்க நாயக்கனேரி மலைப்பகுதியில் மட்டும் 150 போலீசார்  வஜ்ரா வாகனம்  தடி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலை கிராமத்தில் உள்ள வாக்கு மையங்களை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் கிராம மக்களிடம் வாக்கு உரிமை குறித்து எடுத்து கூறினர்.  இருப்பினும் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க முன்வரவில்லை என்பது குறிப்பிட தக்கது.

No comments

Thank you for your comments