Breaking News

உலக பார்வை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்...



ஈரோடு:

உலக  பார்வை தினத்தை முன்னிட்டு ஈரோட்டில்  விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது...             

உலக பார்வை தினத்தை முன்னிட்டு ஈரோடு அச்சுதா ஐ கேர் மற்றும் அச்சுதா இன்ஸ்டியூட் ஆப் ஆப்டோமெட்ரி சார்பாக கடந்த 13.10.2021 அன்று வாக்கத்தான் (walkathon) என்ற பெயரில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.

விழிப்புணர்வு நடைபயணத்தில் கண்தானம் செய்வதன் அவசியத்தை உணர்த்தும்  விதமாக விழிப்புணர்வு அட்டைகளை ஏந்தி ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியிலிருந்து ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். 

மேலும் கண்தானத்தின்  முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக பொதுமக்களிடம் இருந்து கிட்டத்தட்ட 100 கண்தான படிவங்கள் பெறப்பட்டது. 

இதுகுறித்து அச்சுதா ஐ கேர் மருத்துவர் களிடம் கேட்டபோது    "உலகம் முழுவதும் சுமார் 2.2 பில்லியன் மக்கள் கண் பார்வை குறைபாடு அல்லது பார்வையில்லாமல் காணப்படுகிறார்கள். ஆகவே நாம் கண் தானம் செய்தால் நமது கண்களை  மற்றவர்களுக்கு வயது வேறுபாடு இல்லாமல் கண்களை மாற்றியமைத்து சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் கண்களில் குறைகளை சரி செய்யலாம். மேலும் கலைஞர் கண்ணொளி  காப்பீட்டு திட்டம் எனும் சேவையில் வருடந்தோறும் அரசுப் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்து அவர்களுக்கு கண் கண்ணாடிகளை வழங்கி நமது அச்சுதா ஐ கேர் என்ற தன்னார்வ நிறுவனம் சேவை செய்து வருகிறது.  எனவே நாம் அனைவரும் கண்தானம் செய்வதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு கண்தானம் செய்வோம்" என்று கூறினர்.

No comments

Thank you for your comments