இலவச கண் பரிசோதனை முகாம்
தருமபுரி :
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 24.10.2021 ஞாயிற்றுகிழமை அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெரியாம்பட்டி டிஎன்சி தொண்டு நிறுவன இயக்குனர் கோவிந்தசாமி மற்றும் ரியல் பவுண்டேஷன் இயக்குனர் செந்தில் ராஜா காரிமங்கலம் வள்ளல் காரி அரிமா சங்கம் தலைவர் அரிமா பொன்னுசாமி மற்றும் செயலாளர் மகாலிங்கம் பட்டைய தலைவர் பெரியசாமி வழக்கறிஞர் மற்றும் யுகா ஆப்டிகல்ஸ் கிருஷ்ணகிரி அதன் உரிமையாளர் சசிகுமார், தேமுதிக மாவட்ட பொருளாளர் இராமச்சந்திரன் அவர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெரியாம்பட்டி சுற்றுவட்ட கிராமப்புற மக்கள் இந்த இலவச கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மேலும் இம்முகாமில் அவர்களுக்கு மருத்துவ உதவிகளும், ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் டிஎன்சி தொண்டு நிறுவன பணியாளர்கள் தமிழ்செல்வி, கீர்த்தனா, ரம்யா ஆகியோர் இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தனர்.
No comments
Thank you for your comments