மது போதையில் ஜென்ரல் எஸ்கார்ட் வாகனத்தை ஓட்டிய காவலர்
சென்னை :
விஐபி மற்றும் விவிஐபிகளுக்கு பாதுகாப்புக்காக செல்லும் ஜென்ரல் எஸ்கார்ட் வாகனத்தை காவலர் ஒருவர் மது போதையில் விபத்து ஏற்படும் விதமாக அதிவேகமாக ஓட்டி வந்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் விஐபி மற்றும் விவிஐபிகளுக்கு, பாதுகாப்புக்கு செல்லும் வாகனத்தை சரவணன் என்கின்ற காவலர் மது போதையில் ஓட்டி வந்ததாகவும் அந்த வாகனத்திற்கு உள்ளே அவரோடு சேர்ந்து அவருடைய நான்கு நண்பர்கள் உட்பட ஐந்து பேரும் மது பாட்டில்களுடன் மது அருந்தி விட்டு மிக வேகமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஒட்டி வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் அந்த பகுதியில் இருந்த பொது மக்கள் அதிவேகமாக வந்த எஸ்கார்ட் வாகனத்தை நிறுத்தி கேட்டபோது, காருக்குள் போதையில் இருந்த அந்த காவலர் நான் ஒரு போலீஸ் என்றும் இந்த வாகனம் விஐபி, விவிஐபி மற்றும் நீதிபதிகளுக்கு பாதுகாப்புக்கு செல்லும் வாகனம் நான் இப்படி தான் வேகமாக வருவேன் உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்றும் பொதுமக்களை மிரட்டியவாறு குரலை உயர்த்தி கத்திக்கொண்டே பொதுமக்களை மிரட்டி வந்தார்.
பின்னர் இதனால் கோபமடைந்த. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அந்நேரத்தில் பணியிலிருந்த போக்குவரத்து காவல் அதிகாரியிடம் கூறினர். அவர் வந்து காரை சோதனையிட்டபோது காருக்குள் இருந்த அந்த 5 பேரில் நான்கு பேரு மட்டும் வாகனத்தை விட்டு இறங்கி ஓடி விட்டதாகவும்,எஸ்கார்ட் வாகனத்தை ஓட்டி வந்த காவலர் மட்டும் பொது மக்களிடம் சிக்கி கொண்டு வாக்கு வாதத்தில் ஈடு பட்டுள்ளார்.
இந்நிலையில் பொதுமக்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ண பிள்ளையை போதையில் இருந்த காவலர் தாக்க முற்பட்டதாகவும் அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் உதவி ஆய்வாளர் அடிக்கப் போகிறாயா என்று கூறி அந்த போதை காவலருடைய கன்னத்தில் ஒரு அடி வைத்தனர்.
அப்போது குடி போதையில் இருந்த அந்த காவலர் நான் ஒரு போலீஸ் என்றும் பாராமல் என்னையே அடிக்கிறீர்கள் என்று அழுதுகொண்டு போதையில் தனது சட்டையை கழற்றி அரை நிர்வாண கோலத்தில் சாலைக்கு நடுவே ஓடினார். இந்நிலையில் அரை நிர்வாணமாக சாலையில் ஓடிய அந்த காவலரை போக்குவரத்து காவலர்கள் விடாப்பிடியாக இழுத்துவந்து எஸ்கார்ட் வாகனத்திற்கு உள்ளே அமர வைத்து அந்த வாகனத்தை அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் சிக்கித் தவித்தன.
பின்னர் அந்த வாகனத்துடன் அந்த போதை காவலரையும் அரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். எதற்காக இந்த எஸ்கார்ட் வாகனமானது விஐபி விவிஐபிகள் இல்லாமல் வெளியே வந்தது எனவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
No comments
Thank you for your comments