சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் முப்பெரும் விழா
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து நாதர் ஆலயத்தில் முப்பெரும் விழா நடைபெற்றது.
தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் காஞ்சிபுரம் குருசேகரம் சார்பில் காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்து நாதர் ஆலயத்தில் ஆலய நூற்றாண்டு விழா தொடக்க நன்றி வழிபாடு , திடப்படுத்தல் வழிபாடு , நலத்திட்ட விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக சென்னை பேராயம் பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கலந்துகொண்டு 129 நபர்களுக்கு திடப்படுத்துதல் செய்து வைத்து சிறப்புரையாற்றி தையல் இயந்திரம் ,கல்வி உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தென் வட்டாரத் தலைவர் ரிச்சர்ட்சன்பேராயரம்மா யமுனா ஜார்ஜ் ஸ்டீபன், ஆயர் சேகரத் தலைவர் தேவ இரக்கும், செயலர் சைலஸ் சக்ரவர்த்தி, பொருளர் ஷீபா சுகிர்தவதி உள்ளிட்ட குரு சேகர அலுவலர்கள் சேகரை குழு உறுப்பினர்கள் மற்றும் திருச்சபை இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
No comments
Thank you for your comments