ஆபத்தான நிலையில் சாலையை கடக்கும் பள்ளி மாணவர்கள்...!
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள கழுதூர் ஊராட்சியில் சென்னை-தேசிய நெடுஞ்சாலையில் அருகே அரசினர் மேல்நிலைப்பள்ளி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது.
இச்சாலையில் கார், பேருந்து,சரக்கு வாகனம் உட்பட தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வாகனங்கள் செல்கிறது அடிக்கடி பல கோரவிபத்துகள் நடக்கின்றன. விபத்துகளால் பலர் உயிர் இழந்துள்ளார்கள்.
இந்நிலையில் பள்ளி மாணவர்கள் சாலையை கடக்கும்போது பெரும் அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள். மாணவர்களின் பெற்றோர்கள் மிகவும் கவலையோடு பள்ளிக்கு மாணவர்களை அனுப்பி வைக்கும் அவல நிலை நீடிக்கின்றது.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
மேலும் மாணவர்களின் பாதுகாப்பு நலன்கருதி சம்மந்தப்பட்ட நிர்வாகம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


No comments
Thank you for your comments