சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்
காஞ்சிபுரம் 2 ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடும் ராஜலட்சுமி, வாலாஜாபாத் ஒன்றிய 7 வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் ஆர்.கே.தேவேந்திரன் ஆகியோரை ஆதரித்து ஏனாத்தூர் பகுதியில் மாநில மாணவரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில் மகளிருக்கு இலவச பேருந்து வசதி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி கொரோனா கால நிதி 4000 மற்றும் 14 வகை மளிகை பொருள் வழங்கியது உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பூபாலன்,நகர செயலாளரும் தேர்தல் பொறுப்பாளருமான சன் பிரான்டு ஆறுமுகம், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் வேதாசலம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Click here 👉 வரலாற்று நினைவலைகள்... சுவாரஸ்யம்...



No comments
Thank you for your comments