டாஸ்மாக் ஊழியர் படுகொலை... டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டஈடு வழங்க கோரிக்கை
விழுப்புரம்
டாஸ்மாக் ஊழியர் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு டாஸ்மாக் ஒருங்கினைந்த விற்பனையாளர் பணியாளர்கள் முன்னேற்றச்சங்கம் சார்பில் மாநில பொருளாளர் க.சிவக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும் டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
ஒரகடம் பகுதியில் உள்ள கடை எண் 4109ல் விற்பனையாளராக பணிபுரிந்த துளசிதாஸை மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். இதை தமிழ்நாடு டாஸ்மாக் ஒருங்கிணைந்த விற்பனையாளர்கள் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து அவர்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும். அன்னாரின் குடும்பத்தாருக்கு டாஸ்மாக் நிர்வாகம் நஷ்டஈடு வழங்க வேண்டும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாவல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம், தாக்கப்பட்ட விற்பனையாளர் பூரண குணம் அடைய இறைவனை வேண்டுகிறோம். இந்த தாக்குதலை வன்மையாக கன்டிக்கிறோம் இதற்கு முழுப்பொறுப்பும் தமிழக அரசுதான் என்று தமிழ்நாடு டாஸ்மாக் ஒருங்கினைந்த விற்பனையாளர் பணியாளர்கள் முன்னேற்றச்சங்கம் சார்பில் மாநில பொருளாளர் க.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
🔥Also Read 👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு
🔥Also Read 👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு
🔥Also Read 👍 ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெருந்தேவி தாயார் முதல் முறையாக வெள்ளித் தடியின் மீது தங்க கேடயத்தில் காட்சி

No comments
Thank you for your comments