திமுக நிறைவேற்றிய வாக்குறுதிகளை விளக்கி வாக்கு சேகரிப்பு...
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் 2 ஆவது வார்டு மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிடும் ராஜலட்சுமி வாலாஜாபாத் ஒன்றிய 8 வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் உலகநாதன் ஆகியோரை ஆதரித்து, வையாவூர் பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறுவேடல் செல்வம் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரத்தில், மகளிருக்கு இலவச பேருந்து வசதி கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி கொரோனா கால நிதி 4000 மற்றும் 14 வகை மளிகை பொருள் வழங்கியது உள்ளிட்ட தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு விளக்கி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Click here 👉 வரலாற்று நினைவலைகள்... சுவாரஸ்யம்...
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் பூபாலன், நகர செயலாளரும் தேர்தல் பொறுப்பாளருமான சன் பிரான்டு ஆறுமுகம் ,
ஒன்றிய துணை செயலாளர் தேவேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் வேதாசலம்,ஏனாத்தூர் முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments