Breaking News

காஞ்சிபுரம் 1வது வார்டு திமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

 காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் 1வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் பாலாஜி தனது 5ம் நாள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கருப்படித்தட்டடை ஊராட்சியிலிருந்து வீதி வீதிகளாக திம்மசமுத்திரம், கூரம், கோனேரிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார்  ஈடுபடுகிறார்.


கருப்படித்தட்டடை ஊராட்சி பொதுமக்கள் திமுக வேட்பாளர்கள் நித்யா சுகுமார் மற்றும் பாலாஜி ஆகியோருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார்,தேர்தல் பொறுப்பாளர்கள் மலர்மன்னன், மண்டி சம்பத், பொன்னா வெங்கடேசன், எம்.எஸ்.சுகுமார், மகேந்திரன், விஜயகுமார் உள்ளிட்ட திமுகவினர்  பலர் உடனிருந்தனர்.



No comments

Thank you for your comments