பவானிபூர் இடைத்தேர்தல்- மம்தா பானர்ஜி வெற்றி
கொல்கத்தா, அக்.3-
மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகள் பெற்று 58,389 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், அவரது கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையில் மம்தா பானர்ஜி மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்றார்.
தேர்தல் கமிஷன் விதிகள்படி எம்.எல்.ஏ. அல்லது எம்.எல்.சி. பதவிகளில் இல்லாதவர்களும் முதலமைச்சராக அல்லது அமைச்சராக பதவி ஏற்கலாம். ஆனால் அவர்கள் 6 மாத காலத்துக்குள் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற வேண்டும்.
அந்த வகையில் மம்தா பானர்ஜி நவம்பர் 5ம் தேதிக்குள் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.
அவரது பாரம்பரிய தொகுதியான பவானிபூர் தொகுதியில் சோபன் தேவ் சட்டோபாத்யாயா திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருந்தார். அவர் மம்தா பானர்ஜிக்கு தொகுதியை விட்டுக் கொடுக்கும் வகையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
Also 👍Read 👉 பத்மநாபபுரம் அரண்மனையின் மன்னர் பாரம்பரிய உடைவாள் கைமாற்றம்.. அமைச்சர்கள் பங்கேற்பு..
மம்தா பானர்ஜி பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பெண் வக்கீல் பிரியங்கா டிப்ரிவாலை பா.ஜனதா வேட்பாளராக அக்கட்சி நிறுத்தியது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் ஸ்ரீஜிப் பிஸ்வாஸ் நிறுத்தப்பட்டார். அவர்கள் தவிர மேலும் 9 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.
கடந்த மாதம் 30-ந்தேதி இந்த தொகுதியில் வாக்குப்பதிவு நடந்தது. 57 சதவீதம் ஓட்டு பதிவாகி இருந்தது.
பவானிபூர் உள்ளிட்ட 3 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 அடுக்கு பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் முதல் சுற்றில் இருந்தே மம்தா பானர்ஜி முன்னிலையில் இருந்தார்.
மம்தா பானர்ஜி முதல் சுற்றில் 5,333 ஓட்டுகளும், பிரியங்கா டிப்ரிவால் 2,956 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். மம்தா பானர்ஜி 2,377 ஓட்டுகள் முன்னிலை பெற்றிருந்தார்.
2-வது சுற்றில் 14,284 ஓட்டுகள் எண்ணப்பட்ட நிலையில் மம்தா பானர்ஜிக்கு 9,974 ஓட்டுகளும், பிரியாவுக்கு 3,828 ஓட்டுகளும் கிடைத்து இருந்தன. 2வது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி 6,146 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தார்.
3வது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி 9,974 ஓட்டுகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். 11வது சுற்று முடிவில் மம்தா பானர்ஜி, சுமார் 34 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருந்தார்.
மதியம் 1:30 மணி அளவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி 17வது சுற்றின் முடிவில் 67,620 வாக்குகள் பெற்று, 45,738 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா டிப்ரிவால் 21,882 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் இருந்தார்.
20வது சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது மம்தா பானர்ஜி 82,068 வாக்குகள் பெற்றிருந்தார்.
பாஜகவின் பிரியங்கா டிப்ரிவால் 25,680 வாக்குகள் பெற்றிருந்தார்.
மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் 21வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகள் பெற்று 58,389 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பிரியங்கா டிப்ரிவால் 26,320 வாக்குகள் பெற்றிருந்தார்.
பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான செல்வி மம்தா பானர்ஜி-க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி விவரம் வருமாறு:
பபானிபூர் இடைத்தேர்தலில் தாங்கள் பெற்றுள்ள மாபெரும் வெற்றிக்கு எனது வாழ்த்துகள் மமதா பானர்ஜி அவர்களே. மேற்கு வங்க மக்கள் தங்கள் மீது வைத்துள்ள அசைக்கமுடியாத நம்பிக்கைக்கு மீண்டும் சான்றளிக்கும் வகையில் இந்தப் பெருவெற்றி திகழ்கிறது.
Congratulations to Mamata Banerjee on her resounding victory in the Bhabanipur by-election. The massive mandate reconfirms the unassailable confidence that the people of West Bengal have reposed on you.
Congratulations to @MamataOfficial on her resounding victory in the Bhabanipur by-election. The massive mandate reconfirms the unassailable confidence that the people of West Bengal have reposed on you.#MamataBanerjee
— M.K.Stalin (@mkstalin) October 3, 2021
No comments
Thank you for your comments