உதவிகரம் 9ஆவது கிளை திறப்பு விழா
திருவள்ளூர், அக்.24-
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அடுத்த மிட்டனமல்லி கிராமத்தில் உதவிகரம் ஒன்பதாவது கிளை திறப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் வட்டாச்சியர் திருமதி விஜயலட்சுமி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் இந்த பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கும் பொதுமக்களுக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டது இந்த உதவிக்கரம் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒன்பது கிளைகள் துவங்கப்பட்டது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது இது தொடர்ந்து ஆங்காங்கே உதவிகள் பெருமளவு வழங்கப்பட்டு வருகிறது.
இதனை ஏழை எளிய மக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் என்று உதவிகரம் நிறுவனர் திரு ஜெனார்தனராவ் தெரிவித்தார் இவர்களுடன் வெங்கட் ரவிராஜன் பில்டர் திருமதி சகுந்தலா மற்றும் பிரசாத் ராவ் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் வரவேற்பாளர் மாணவரணி செ.நிரஞ்சனா வரவேற்றார் இந்த புதிய கிளைக்கு நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்களாக வேல்முருகன் சி.ஹரிபாபு நரேஷ் ந.கன்னியப்பன் ஆகியோரை நியமனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் நிவாரணப் பொருள்களை நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில பொறுப்பாளர் ஜெ.பிரேம்குமார் கலந்துக்கொண்டு நிவாரணங்களை வழங்கினார்.
No comments
Thank you for your comments