26-10-2021 அன்று குலுக்கல் முறையில் வீட்டு எண் தேர்வு அறிவிப்பு
தருமபுரி:
ஒசூர் வீட்டு வசதி பிரிவு, தர்மபுரி. ஏ.ஜெட்டிஅள்ளி திட்டப்பகுதியில் சுயநிதி திட்டம் மற்றும் தவணைமுறை திட்டத்தின் கீழ்கட்டப்பட்டு மீதமுள்ள குறைந்த வருவாய் பிரிவு / மத்திய வருவாய் பிரிவு மற்றும் உயர் வருவாய் பிரிவு வீடுகள் மற்றும் பாலக்கோடு திட்டப்பகுதியில் மீதமுள்ள மனைகள் ஆகிய இனங்களுக்கு பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
வருகின்ற 26-10-2021 அன்று மதியம் 2.30 மணி அளவில் வீட்டு வசதி வாரிய பழைய குடியிருப்பில் அமைந்துள்ள சமுதாய கூடத்தில் குலுக்கல் முறையில் வீட்டு எண் தேர்வு செய்யப்பட உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் அனைவரும் குலுக்கலில் கலந்துகொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments