Breaking News

ஊரக உள்ளாட்சி தேர்தல்!: 4 மணி நேரத்தில் 20 சதவீதம் வாக்குப்பதிவு

சென்னை

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று காலை தொடங்கியதிலிருந்து 4 மணி நேரத்தில் 20 சதவீதத்தை தாண்டி வாக்குகள் பதிவாகியுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் மதியம் 1 மணி வரை 42.6% பதிவாகியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் மதியம் 1 மணி நிலவரப்படி ஊரக உள்ளாட்சி தேர்தலில் 33.56 % வாக்குப்பதிவு ஆகியுள்ளது

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

🔥Also Read  👍 பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகளை வகுக்க வேண்டும்! - உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு

🔥Also Read  👍 விதிகளை மீறும் தி சென்னை சில்க்ஸ்! துணை போகின்றதா மாநகராட்சி..?-பகீர் குற்றச்சாட்டு

முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மட்டும் மாலை 5 முதல் 6 மணி என கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராம ஊராட்சித்தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு தற்போது தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை இணையதளம் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நீண்டவரிசையில் நின்று ஆர்வமுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

முதல் 4 மணி நேரத்தில் 20 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.

காலை 11 மணி நிலவரப்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டத்தில் 24 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பதிவாகி உள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இதுவரை 61,000 பேர் வாக்களித்துள்ளனர். காலை 11 மணி நிலவரப்படி 14.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் - 11 மணி வாக்கு நிலவரம்

விழுப்புரம்: 20.19 சதவீதம்

ராணிப்பேட்டை : 18.7 சதவீதம்

தென்காசி : 24.73  சதவீதம்

நெல்லை : 23.32 சதவீதம்

வேலூர் : 20.41 சதவீதம்

திருப்பத்தூர் : 14.7 சதவீதம்

செங்கல்பட்டு : 15.95 சதவீதம்

காஞ்சிபுரம் : 24.37 சதவீதம்

திருநெல்வேலி : 23.32 சதவீதம்

சில இடங்களில் பதட்டம் நிலவியது...

காஞ்சிபுரம், இலுப்பப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஒன்று மற்றும் 2வது வார்டு வாக்கு சாவடியில் 'ஊழியர்கள் அனைவரும்' ஒரே நேரத்தில் சாப்பிட சென்றதால்...  50க்கும் மேற்ப்பட்ட பெண் வாக்காளர்கள் ஒரு மணி நேரமாக தரையில் அமர்ந்து காத்துக்கிடக்கின்றனர்.. இதனால்  இலுப்பப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட சிட்டியம்பாக்கம் ஊராட்சி ஒன்றி நடுநிலைப் பள்ளி வாக்கு சாவடியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட  உள்ளாவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவருக்காக லட்சுமி என்பவர் போட்டியிடுகிறார். இவருடைய பெயரை தனலட்சுமி என அச்சடித்து வாக்குச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.  பெயர் தவறான காரணத்தினால் தமது வெற்றி பாதிக்கும் என கருதி வேட்பாளரும் அவரது முகவர்களும் வாக்குச்சாவடி தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தற்போது தவறாக் அச்சடிக்கப்பட்ட அந்த வாக்கு சீட்டில் அழிக்கும் மை கொண்டு பெயர் திருத்தம் செய்து வாக்காளர்களுக்கு வழங்குவதாக தேர்தல் அலுவலர்கள் கூறியதற்கு வேட்பாளர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3 மணி நேரமாக வாக்குபதிவை நிறுத்தி வைத்துள்ள தேர்தல் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். 

No comments

Thank you for your comments