Breaking News

திருப்பூரில் நூல் விற்பனை முகவர் கடத்தல் - 3 பேர் கைது

திருப்பூர்:  

நூல் விற்பனை முகவர் செல்வராஜை கடத்தியது உடுமலை தளியை சேர்ந்த செந்தில்பிரபு, திருப்பூரை சேர்ந்த ராஜ சேகரன், குமார் என்பது தெரியவந்தது.

திருப்பூர் போயம் பாளையம் அவிநாசி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 64). நூல் விற்பனை முகவர். சம்பவத்தன்று வீட்டு அருகே செல்வராஜ் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் செல்வராஜூடன் திடீரென தகராறில் ஈடுபட்டனர்.

 பின்னர் அந்த கும்பல் செல்வராஜை காரில் ஏற்றி கடத்தி சென்றது. இதுகுறித்து செல்வராஜ் மகன் குரு பிரசாத் அளித்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் விசாரித்தனர். மேலும் செல்வராஜை கடத்தி சென்ற கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. 

தனிப்படையினர் விசாரணையில் செல்வராஜை கடத்தியது உடுமலை தளியை சேர்ந்த செந்தில்பிரபு, திருப்பூரை சேர்ந்த ராஜ சேகரன், குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செல்வராஜை மீட்டனர். 

நூல் வியாபாரிகளான 3 பேரும், செல்வராஜிடம் நூல்களை விற்பனை செய்ய கொடுத்துள்ளனர். அதற்கான பணம் ரூ.8 லட்சத்தை செல்வராஜ் கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் செந்தில் பிரபு உள்பட 5 பேர் சேர்ந்து செல்வராஜை கடத்தியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

No comments

Thank you for your comments