Breaking News

3 செயற்கை கோள்கள் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் கே.சிவன்

புதுடெல்லி:

எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டில் ஏவப்படும் செயற்கைக்கோளின் செயல்பாடு தகுதி குறித்து சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற சோதனை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் பூமியை கண்காணிக்கும் செயற்கைக் கோள்களை ஏ.வி. தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டின் இறுதிக் காலாண்டில் உள்நாட்டு தொழில் நுட்பங்களுடன் பூமியை கண்காணிக்கும் 3 முக்கிய செயற்கைக் கோள்கள் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

முதல்கட்டமாக இ.ஒ.எஸ்-4 (ரைசாட்-1ஏ) மற்றும் இ.ஒ.எஸ்-6 (ஓசியன் சாட்-3) ஆகிய செயற்கைக்கோளும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது.

இதையடுத்து இ.ஓ.எஸ்-2 (நுண் செயற்கைக்கோள்) செயற்கைக்கோளான முதல் சிறிய செயற்கைக்கோள் ராக்கெட் (எஸ்.எஸ்.எல்.வி.) மூலம் ஏவப்பட உள்ளது.

எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்டில் ஏவப்படும் செயற்கைக்கோளின் செயல்பாடு தகுதி குறித்து சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற சோதனை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறியதாவது:-

பூமியை கண்காணிக்கும் 3 முக்கிய செயற்கைகோள்கள் உள்நாட்டு தொழில் நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இறக்கு மதியைக் குறைப்பதற்கான எங்கள் முயற்சியின் ஒரு பகுதியாக செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும், தகவல்களை பரிமாற்றம் செய்ய பயன்படும் கருவி (டி.ஆர். மாடியுல்), பயண அலை குழாய் பெருக்கிகள் (டிடபுள்யுடிஏ) மற்றும் சுற்றறிக்கைகள் ஆகியவை உள்நாட்டு தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகள் குறித்து கண்டுபிடிக்க விரிவான சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments