Breaking News

29.10.2021 அன்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம்... விவசாய பெருமக்கள் பயன்பெற அழைப்பு

ஈரோடு:

29.10.2021 அன்று  வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது  என்று  மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் அக்டோபர் - 2021-ஆம் மாதத்திற்கான வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்டஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் 29.10.2021 வெள்ளிக் கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.  அன்றைய தினம் காலை 10.00 மணிமுதல் 11.30வரை மனுக்கள் பெறப்படும். 

🔥பொருளாதாரம் - அரசு திட்டங்கள்  நிலை என்ன? 👆🔔👍

11.30 மணிமுதல் 12.30 மணிவரை விவசாயசங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடர்பான தங்களது பகுதி பிரச்சினைகள் குறித்து கருத்துக்கள் தெரிவிக்கலாம். பிற்பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலர்களின் விளக்கங்களும் தெரிவிக்கப்படவுள்ளது. 

எனவே விவசாய பெருமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments