Breaking News

தனித்தேர்வர்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு

ஈரோடு:

உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் மேல்நிலைத் தேர்வு அசல் மதிப்பெண் சான்றுகள் பெற்றுக் கொள்ளலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட எல்லைக்குட்பட்ட மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரையிலான பருவங்களுக்குரிய மேல்நிலைப் பொதுத்தேர்வு / துணைத் தேர்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு மையங்களில் நேரடியாக பெற்றுக் கொள்ளப்படாத, உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மேல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நேரடி தனித்தேர்வர்களது (HP) விண்ணப்பங்களுடன் இணைத்துப் பெறப்பட்ட பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள்  ஆகியன தேர்வு மையத்தில் இருந்து பெற்று, ஈரோடு உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.  

எனவே மேற்காணும் மேல்நிலைத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை இதுவரை பெறாத தனித்தேர்வர்கள் 90 நாட்களுக்குள் கீழ்க்குறிப்பிட்டுள்ள இவ்வலுவலக முகவரியில்  உரிய ஆளறிச் சான்று மற்றும் தேர்வுக்கூட  நுழைவுச் சீட்டுடன் நேரில் அணுகியோ அல்லது ரூ.45/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய  சுய முகவரி எழுதப்பட்டஉறையுடன் அனுப்பியோ மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.

🔥பொருளாதாரம் - அரசு திட்டங்கள்  நிலை என்ன? 👆🔔👍

அலுவலகமுகவரி

உதவி இயக்குநர்,

அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்அலுவலகம்,

முதன்மைக் கல்விஅலுவலகவளாகம்

(பழையரயில் நிலையம்  சாலை)

ஈரோடு - 638001.

மேற்காணும் மேல்நிலைத் தேர்வு மதிப்பெண் சான்று பெற தவறினால் தேர்வுத் துறை விதிமுறைகளின் படி விநியோகிக்கப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் கழிவுத் தாள்களாக கருதி அழிக்கப்பட சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்குநரால்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த தனித்தேர்வர்கள் அவரவரது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு பலனடைய  இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு உதவி இயக்குநர், அரசுதேர்வுகள் சீ.யாமினி தெரிவித்துள்ளார்.


No comments

Thank you for your comments