Breaking News

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து தர்ணா போராட்டம்

கடலூர்

குப்பநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட குப்பநத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் அப்பகுதி பொதுமக்களுக்கு சுழற்சி முறையில் பொதுமக்களை வைத்து 100-நாள் வேலை செய்து வருகின்றனர் தேர்தலில் தோல்வியடைந்த ஒரு பிரிவினர் முன்விரோதம் காரணமாக தேசிய ஊரக 100 நாள் திட்ட பணியில் அத்து மீறி செயல்படுவதாகம் அவர்கள் மீது புகார் தெரிவிக்க ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி அய்யாசாமி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இன்று  புகார்மனு கொடுக்க வந்துள்ளார்.

அந்த மனுவை வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் எதிர்த்தரப்புக்கு ஆதரவாக நடந்துகொள்கிறார் என்றும் சாதியரீதியில் நடந்துகொள்கிறார் என்று கூறி   ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ந்து விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களை அவமதிப்பு செய்துவரும் விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும்  மாவட்ட திட்ட அலுவலர்  நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் குப்பநத்தம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

No comments

Thank you for your comments