திமுகவின் 100 நாள் சாதனைகளை விளக்கி தேர்தல் பிரச்சாரம்
காஞ்சிபுரம்
அறிஞர் அண்ணா சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவேற்றினார் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார்...
காஞ்சிபுரம் 1வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்யா சுகுமார் அவர்களை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து பிரச்சாரம் செய்ய இறுதி நாளான இன்று அறிஞர் அண்ணா சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்களிடம் திமுக மாவட்ட பிரதிநிதியும்-மு.மாவட்ட கவுன்சிலரும்மான எம்.எஸ்.சுகுமார் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. அதையொட்டி திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக,உள்ளிட்ட கட்சியை சார்ந்த வேட்பாளர்கள் இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் 1வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் திருமதி நித்யா சுகுமார் அவர்களை ஆதரித்து தனது கணவரான திமுக மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார் காஞ்சிபுரம் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து அறிஞர் அண்ணா சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் கிராம மக்களிடம் திமுகவின் 100 நாள் சாதனைகளை எடுத்துரைத்து தேர்தல் பிரச்சார துண்டு பிரச்சுரங்களை வழங்கி பொதுமக்களிடையே திமுகவுக்கு ஆதரவை அளிக்க திமுக மாவட்ட பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார் கேட்டுக்கொண்டார்.
No comments
Thank you for your comments