Breaking News

ஓட்டுப் பெட்டிகளை எடுத்து செல்ல அணிவகுக்கும் வாகனங்கள்!

காஞ்சிபுரம், அக்.4 -

காஞ்சிபுரத்தில் உள்ளாட்சி தேர்தலை ஒட்டி வாக்கு பதிவு செய்யும் மையங்களுக்கு ஓட்டுப் பெட்டிகளை எடுத்து ஆட்சியர் வளாகத்தில் நான்கு சக்கர வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளன. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முதற்கட்டமாக 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக இன்று (4ம் தேதி) மாலையுடன் பிரச்சாரம் முடிவடைகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூர், உத்திரமேரூர், படப்பை ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு ஓட்டுப் பெட்டிகளை பாதுகாப்புடன் எடுத்துச் செல்ல நூற்றுக் கணக்கான வேன்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளன. 

நாளை காலை முதல் போலீஸ் மற்றும் அதிகாரிகளுடன் வாங்குப் பெட்டிகள் எடுத்துச் செல்வம் படுகின்றன.

நாளை மாலை 6 மணிக்கும் அனைத்து வாக்கு மையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுக்கள் மற்றும் தேவையான உபகரனங்கள் என, அனைத்தையும் அனுப்பி வைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதவிர, வாக்கு மையங்களில் தேவையான அனைது ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. பதட்டமான வாக்கு மையங்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

No comments

Thank you for your comments