சுமார் 37 இடங்களில் தீவிர வாகன சோதனை
காஞ்சிபுரம்
வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற "OPERATION DISARM OPERATION VEHICLE CHECK” வாகன சோதனையை பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம். சுதாகர் அவர்களின் உத்தரவின்பேரில் இன்றும் ( 30.09.2021 ) "OPERATION DISARM OPERATION VEHICLE CHECK” என்ற பெயரில் திடீர் வாகனசோதனையானது மாவட்டம் முழுவதும் சுமார் 37 இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ்குமார் அவர்கள் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் நடைபெற்ற வாகன சோதனையினை திடீர் பார்வையிட்டு காவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர்டாக்டர் எம். சுதாகர் உடனிருந்தார். இவ்வாகனச் சோதனையின் போது வாகனஓட்டிகளுக்கு போக்குவரத்து விதிமீறல் குறித்து அறிவுறுத்தியும், விதிமீறல்களில் ஈடுபட்ட 880 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இவ்வாகனச் சோதனையில் சுமார் 220 காவலாகள் ஈடுபட்டனர்.



No comments
Thank you for your comments