Breaking News

காவல்துறையினரின் குறை கேட்பு கூட்டம்

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காவல்துறையினரின் குறை கேட்பு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை மற்றும் குளச்சல் என 4 காவல்துறை உட்கோட்டங்கள் உள்ளன. இங்கு சுமார் 1500 காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். காவல்துறையினருக்கு பல்வேறு வகையிலான மன அழுத்தம் மற்றும் குறைகள் இருந்து வருவதையடுத்து இதனை கண்டறிந்து களைய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

குறிப்பாக மன அழுத்தத்தை போக்க யோகா, உடற்பயிற்சி, மன நல ஆலோசனை என்று அவ்வபோது அரசு வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக காவல்துறையினரின் குறை கேட்கும் கூட்டம் இன்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த முகாமில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட காவலர்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்த மனுக்களை வழங்கினர். நியாயமான குறைகள் குறித்து உரிய விசாரணை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.


No comments

Thank you for your comments