Breaking News

கொரோனா காலத்தில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்துக்கு நிவாரணம், அரசு வேலை வழங்க வலியுறுத்தல்

தருமபுரி செப்.30-

தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநிலசெயற்குழு கூட்டம் தருமபுரி  இரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் கே.சக்திவேல் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கே.வளர்மதி மாநில பொருளாளர் எஸ்.காளியம்மாள், மாநில இணைச் செயலாளர் ஆர்.ஜிவா ஸ்டாலின் மாநில துணைத் தலைவர்கள்   ஜி.தேவேந்திரன்  சி.கீதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.

தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்ற  மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வு சுகாதாரத்துறை இயக்குநர்‌ ஆகியோர்  நூறு நாட்களில் கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.  தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழக அரசு கொரோனா காலத்தில் செவிலியர் பணியாற்றியதற்க்காக மூன்று மாத்திற்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 20,000  அறிவித்தது. இதுநாள் வரை செவிலியர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே அனைத்து செவிலியர்களுக்கும் ஊக்கத்தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொரோனா பணி கலத்தில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் மற்றும் அவரது குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும். மேலும் பணி காலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்.

ஒன்றிய அரசில் பணிபுரியும் செவிலியர்களுக்கு இணையான ஊதியம் தமிழகத்தில் பணிபுரியும் அரசு செவிலியர்களுக்கும் வழங்கவேண்டும்.

எம்ஆர்பி தகுத்தேர்வில் தேர்ச்சிபெற்று தொகுப்பூதிய செவிலியராக பணியாற்றி வருபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவிலியர்கள் மற்றும் கண்காணிப்பாளர் நிலை-1 நிலை -2 ஆகியவை தோற்றுவிக்க வேண்டும் .

புதியதாக தோற்றுவிக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் கண்காணிப்பாளர்கள நிலை-1, நிலை-2 ஆகிய பணியிடங்களை தோற்றுவிக்க வேண்டும். செவிலியராக வயது 55 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இரவு பணி பார்க்க வேண்டியுள்ளது. எனவே இந்த வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இரவு பணி விலக்கு அளிக்கவேண்டும். பிற மாநிலங்களை போல் செவிலியர்களுக்கு 5 கட்ட பதவி உயர்வு வழங்க வேண்டும். 

அனைத்து மருத்துவமனைகளிலும் செவிலியர்களுக்கு தனி குடியிருப்பு வளாகம் ஏற்படுத்த வேண்டும். மருத்துவத் துறையில் செவிலியர்களுக்கு தனி இயக்குநரகம் உருவாக்கவேண்டும். செவிலியர்களுக்க்கு தனி பல்கலைக்கழகம் உருவாக்கவேண்டும்.

21 மாதகால ஊதிய உயர்வு நிலுவைத்தொகை பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments

Thank you for your comments