சென்னை அரசு மருத்துவமனை M.R.D துறை கட்டிடத்தில் தினமும் சலசலப்பு
சென்னை:
Amendment Letter யில் பிழை, இன்சூரன்ஸ் சான்றிதழில் பிழை, இறப்பு தொடர்பான மருத்துவ கடிதம் போன்றவைகளில் பிழை ஏற்பட்டால் M.R.D துறைக்கு சென்று படிவம் கொடுத்து மாற்றம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் சென்னை G.H மருத்துவமனையில் M.R.D துறையில் பணிபுரிந்து வரும் மூத்த அலுவலர் நேரு என்பவர் பிழை திருத்த வரும் ஏழை எளிய மக்களிடம் ரூ.100 முதல் (இன்சூரன்ஸ் வைத்திருப்பவர், பிழை திருத்த) ரூ.10,000 வரை லஞ்சம் வாங்கி வருவதாக புகார் எழுந்து வருகிறது.
இதை பற்றி சிலர் அவரிடம் கேட்ட போது எனக்கு 33 வருடம் அனுபவம் எனக்கு எல்லா அதிகாரிகளும் தெரியும் என்று கூறி சமாளித்து வருகிறார்.
1. படிவம் எடுத்து வரும் பொதுமக்களை கீழ்த்தரமாக பேசுதல்
2. லஞ்ச புகார்
3. சமூக இடைவெளி இல்லாமல் தொற்று பரவ செய்தல்
போன்ற புகார்கள் இவர் மீது எழுந்துள்ளன.
இவரால் தினமும் மன உளைச்சலும், சிரமமும் அடைந்து வருகிறோம் அய்யா என்று கண்ணீருடன் பெண்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
நேரு-வை மாற்றி அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
✒செய்தியாளர் கருனாகரன்

No comments
Thank you for your comments