விருத்தாசலம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல்
கடலூர்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த காரமாங்குடி கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே சரிவர குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி பொது மக்கள் ஸ்ரீமுஷ்ணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில் கார்மாங்குடி ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் பழைய பைபிளை எடுத்து விட்டு புதிய பைப்லைன் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர் ஆனால் விரைந்து முடித்து குடிதண்ணீர் வழங்கவில்லை என காலி குடங்களுடன் குடி தண்ணீர் கேட்டு திடீர் சாலை மறியல் செய்தனர் இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது பரபரப்பாக காணப்பட்டது.


No comments
Thank you for your comments