Breaking News

கூட்டுறவு வங்கியில் கோடிகணக்கில் நகைக்கடன், டெப்பாசிட் பண மோசடி - அள்ளல்படும் பொதுமக்கள்

குரும்பூர்:

குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி நடைப்பெற்றுள்ளது. .

குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான ‘பாண்ட்’ பத்திரம் கொடுத்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.


திருச்செந்தூர் அருகே உள்ள குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடிக்கும் மேல் மோசடி.  இது தொடர்பாக தலைவர் பதவி நீக்கம், செயலாளர், துணை செயலாளர், நகை மதிப்பீட்டாளர் உட்பட4 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதும் வங்கி உயர்அதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விபரம் அறிய வங்கிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்நிலையில் ஆழ்வார்திருநகரி வட்டார கூட்டுறவு வங்கியின் களஅலுவலரும், கூட்டுறவு சார்பதிவாளரான ஆழ்வார்குமாரிடம் குரும்பூர் வங்கியின் நகை அடமான கடன் குறித்தும் மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையாளர்கள் கேட்டறிந்தனர்.

அப்போது அவர், ’நான் அனைத்து நகைக்கடனையும் ஆய்வு செய்துவிட்டேன். அதில் எந்த பிரச்னையும் இல்லை, என்று கூறிவிட்டார். பின்னர் அவரே ஒரு நாள் ஆய்வு செய்ததில் ஏதோ சில குளறுபடிகள் இருப்பதாக கூறியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 8-ம் தேதி மற்றும் 13-ம் தேதியில் நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது மொத்தம் நகைக்கடனாக பெறப்பட்ட நகைகள் வங்கியில் 548 பைகளில் வைக்கப்பட்ட நகைகளில் 261 நகை பைகள் மாயமானது ஆய்வில் தெரியவந்தது. இது ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

மேலும்  தொடர்ந்து நடத்திய விசாரணையில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் ரூ.2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 மோசடி செய்தது தெரியவந்தது. 

இதுகுறித்து வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்ததால் அடகு வைத்த நகைகள் குறித்து விசாரணை அதிகாரியிடம் கேட்டறிந்து புகார் மனுக்களை கொடுத்து சென்றனர்.

இந்நிலையில் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை நடத்தினர். அப்போது டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான ‘பாண்ட்’ பத்திரம் கொடுத்து லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

வங்கி பெயரில் வழங்கப்பட்ட போலி பாண்ட்

தொடர்ச்சியாக வங்கியில் லட்சணக்கில் பணத்தை டெப்பாசிட் செய்த வாடிக்கையாளர்கள் விசாரணை குழுவினரிடம் புகார் அளித்து வருகின்றனர்.

இதனால் பண மோசடி ரூ.3 கோடிக்கும் மேல் செல்லலாம் என்று தெரியவருகிறது. இதனையடுத்து வங்கி தலைவர் முருகேசப்பாண்டியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். செயலாளரார் தேவராஜ், துணை செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய், ஆழ்வை. வட்டார கூட்டுறவு வங்கி கள அலுவலர் ஆழ்வார் குமார் ஆகியோர் தற்காலி பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

நகைக்கடனை அரசு தள்ளுபடி செய்ததைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள வங்கியில் வாடிக்கையாளர்களிடம் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால் குரும்பூர் கூட்டுறவு வங்கியில் இதுவரை உரியவர்களிடம் நகைகள் கொடுக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இந்தசூழ்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறைகேடு செய்த பணத்தில் வாங்கிய சொத்துக்களை அவர்கள் தங்கள் பெயரில் இருந்து மற்றொருவர்கள் பெயரில் அவசரஅசரமாக பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments