விஸ்வரூபம் எடுக்கும் கொடநாடு வழக்கு... 2-வது நாளாக தொடரும் விசாரணை..!
நீலகிரி:
கொடநாடு எஸ்டேட் கம்பியூட்டர் ஆப்ரேட்டர் தினேஷின் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசார் 2-வது நாளாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பங்குதாரராக இருந்த கொடநாடு எஸ்டேட்டில் கடந்த, 2017 ஏப்., 23 ஆம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது.
இதில் எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றோரு காவலாளி, கிருஷ்ணதபா காயமடைந்தார். இந்த வழக்கில் சம்மத்தப்பட்டதாக கூறப்பட்ட சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ் சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகிய 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் 103 நபர்கள் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில் 40 நபர்களுக்கு மேல் மறு விசாரணை நடந்து முடிந்துள்ளது. மேலும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கியமாக கொடநாடு மேனேஜர் நடராஜ் , மின் உதவிபொறியாளர் மற்றும் தடயவியல் நிபுணர்களிடம் தனிப்படை போலிசார் விசாரித்து வருகின்றனர்,
இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்பியூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை வழக்கை மறு விசாரணை செய்ய கோத்தகிரி தாசில்தாருக்கு சோலூர் மட்டம் போலீசார் நேற்று மனு அளித்தனர்.
அதன் பின் கொடநாடு கம்யூட்டர் ஆப்பரேட்டர் தினேஷ் தந்தை போஜனிடம் கோத்தகிரி கெங்கரை கிராமத்தில் அவரது வீட்டில் வைத்து உதகை காவல் துணைகண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் 3 மணிநேரம் விசாரணை மேற் கொண்டனர்.
இதில் தினேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன, அவர் மன அழுத்தத்தில் இருந்தாரா,உடல் ரீதியில் எதாவது பாதிப்பு இருந்ததா என்று பல்வேறு கோணத்தில் கேள்வி எழுபப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்கொலைக்கான காரணம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் கொடநாட்டிலிருந்து தங்களுக்கு எந்த அழத்தமும் தரபடவில்லை என்றும் போஜன் பதிலளித்தாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து 2-வது நாளாக தினேஷின் குடும்பத்தினரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது சகோதரி ராதிகா பணியாற்றும் தனியார் பள்ளிக்கு சென்ற போலீசார் அவரை வீட்டிற்கு அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments