Breaking News

மாநிலங்களவை தேர்தல்: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்

சென்னை:

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மாநிலங்களவை 2 உறுப்பினர்கள் இடங்களுக்கு அக்டோபர் 4ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலுக்கு திமுக வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு மற்றும் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என திமுக தலைமை அறிவித்திருந்தது.

திமுக வேட்பாளர்கள் இருவரும் இன்று பிற்பகல் 12 மணி அளவில் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

அதிமுகவின் வைத்திலிங்கத்தின் மற்றும் கே.பி. முனுசாமி இருவரும், தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டு வெற்றி பெற்றதனால் தங்களது மாநிலங்களவை  உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

இரண்டு காலியிடங்களில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் 2022, ஜூன் மாதம் மற்றும் கே.பி. முனுசாமியின் பதவிக் காலம் 2026, ஏப்ரல் மாதம் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments