Breaking News

ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்... வேகமெடுக்கும் வேட்புமனு தாக்கல்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம், செங்கல்பட்டு , வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் தேர்தலுக்கு நேற்று முதல் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 


இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் 

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மனுவை பெற வருகை தந்துள்ளனர்.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் ஐந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது 

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெருமந்தூர், குன்றத்தூர் ஆகியவையாகும் 

இந்த ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில்

11, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், 98 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களும்,  274 ஊராட்சி மன்ற தலைவர்களும், 1938 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்  போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யலாம்



சென்னையில் தேர்தல் ஆணையம் விடுபட்ட ஒன்பது மாவட்டத்திற்க்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 15ம் தேதி முதல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்யலாம், செப்டம்பர் 22 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி தேதி, செப்டம்பர் 23 வேட்புமனு பரிசீலனை, செப்டம்பர் 25 வாபஸ் பெற கடை நாள், அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வாக்கு பதிவு, அக்டோபர் 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

No comments

Thank you for your comments