Breaking News

மினி டெம்போவில் ரேஷன் அரிசி கடத்தல் - ஒரு டன் அரிசி பறிமுதல்... ஒருவர் கைது

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த திட்டக்குடி அருகே உள்ள வாகையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மினி டெம்போ மூலம் ஒருவர் வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை வாங்கி  வருவதாக திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திட்டக்குடி வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன், தனி வருவாய் அலுவலர் முருகன், வட்ட பொறியாளர் சத்யராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

அதற்குள் மினி டெம்போ ரேஷன் அரிசி ஏற்றிக்கொண்டு வாகையூர் அருகே வந்து கொண்டிருந்தபோது அதிகாரிகள் அந்த மினி டெம்போவில் மறித்து சோதனை செய்தனர்.

அப்போது மினி டெம்போவில் ஆயிரத்து 100 கிலோ அரிசி மூட்டைகள் இருந்ததை அதிகாரிகள் கைப்பற்றி பாதுகாப்பிற்காக திட்டக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

மேலும் அரிசி மூட்டைகள் கடலூர் நுகர்வோர் பாதுகாப்பு வாணிப கழக அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.

ரேஷன் அரிசி பறிமுதல் செய்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Thank you for your comments