காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி பாஜகவினர் வைத்து வழிபட்ட விநாயகர் சிலை பறிமுதல்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் புத்தேரி தெரு பகுதியில் காஞ்சிபுரம் மாவட்ட பாஜக இளைஞர் அணி பொதுச் செயலாளர் செல்வம் தலைமையில் அவரது கடையில் தமிழக அரசின் உத்தரவினை மீறி அனுமதியின்றி இந்து முன்னணி பாஜகவினர் 3 அடி விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து பொதுமக்களுக்கு பிரசாதங்களை வழங்கினார்கள்.
விநாயர் சதுர்த்தி விழா குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி இன்றி வைக்கப்பட்ட 3அடி விநாயகர் சிலையை பறிமுதல் செய்து ஆட்டோவில் ஏற்றி எடுத்து சென்றனர்.
வழிபாடு செய்த விநாயகர் சிலையை காவல்துறை, இந்து சமய அறநிலையத் துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments
Thank you for your comments