Breaking News

ஊராட்சி மன்ற தலைவர் விவசாய நிலத்தை அபகரிக்க முயற்சி ... பகீர் குற்றச்சாட்டு

கடலூர் 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தில் அருணாச்சலம் S/0 மாசிலாமணி, ராமசாமி S/0 கலியன், முத்துசாமி S/0 சின்னசாமி, முத்துசாமி S/0 அருணாச்சலம், மாயவன் S/0 ராஜவேல், சிதம்பரம் S/0 முருகேசன், நடேசன் S/0 பழனியப்பன், தனலட்சுமி W/0 சின்னத்தம்பி, வீரமணி W/0 சேகர், ஆகிய ஒன்பது பேரும் கடந்த 1950 முதல் நான்கு தலைமுறைகளாக ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.  அந்த இடத்தில் விவசாயம் செய்து அரசுக்கு முறையான வரி செலுத்திக் கொண்டு நெல் கம்பு சோளம் உள்ளிட்ட பயிர் செய்து வந்தனர்.

இந்நிலையில் தற்போது அரசு நிலம் என கூறி எருமனூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை பொது மக்களை வைத்துக்கொண்டு நிலத்தினை ஆக்கிரமிப்பு செய்து தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் மேற்கூறிய ஒன்பது நபர்களும் தங்களுக்கு வாக்களிக்கவில்லை எனக்கூறி தேர்தல் முன்விரோதம் காரணமாக இச்செயலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments