Breaking News

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார் எடப்பாடி பழனிச்சாமி

காஞ்சிபுரம், செப். 25 -

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் பல்வேறு பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை, முன்னாள் முதலமைச்சர் எப்பாடி பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார்.

தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு  மனுக்கள் பெறப்பட்டு, இறுதிப் பட்டியல் வெளியிடம் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர், வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் ஒரே மேடையில்  அறிமுகப்படுத்தினார். 

அனைவரும் பெருவாரியான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார். அ.தி.மு.க., பொறுப்பாளர்கள், களத்தில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து வேட்பாளர்களும் வெற்றிப் பெற இரவு - பகலாக தேர்தல் பணிகளை செய்ய வேண்டும்.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் முழுவதையும் அ.தி.மு.க., தான் வெற்றிப்பட்டது என்ற செய்தி வாயிலாக நாம் கேட்க வேண்டும். அந்தளவுக்கு நமது பொறுப்பாளர்களின்  பணி சிறப்பாக இருக்க  வேண்டும்.

இவ்வாறு  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

விழாவில் தேர்தல் பார்வையாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின், காமராஜர், கோக்குல இந்திரா, மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் கணேசன், மைதிலி, நிர்வாகிகள் எஸ்.எஸ்.சதியா, தும்பவனம் ஜீவானந்தம், வரதராஜன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments