Breaking News

விருத்தாசலத்தில் காவலர்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100% சதவிகிதம் நேர்மையாக வாக்களிக்க கோரியும் மற்றும்  2003 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் முருகேசன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் மாற்று சமூகத்தை சேர்ந்த புதுக்கூரைப்பேட்டை கண்ணகியை காதல் திருமணம் செய்தார் இதற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் உறவினர்கள் இருவரையும் புதுக்கூரைப்பேட்டை முந்திரி தோப்பில் விஷம் கொடுத்து கொலை செய்த வழக்கு நேற்று கடலூர் நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

இதனால் விருத்தாசலம் பகுதியில் அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்கு விருத்தாசலம் காவல் உதவி கண்காணிப்பாளர் தலைமையில் விருத்தாசலம் நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக போலீசார் விழிப்புணர்வு நடைபயணம் செய்தனர்.

இதில் காவல் ஆய்வாளர் விஜயரங்கன், உதவி ஆய்வாளர் ஆதி உள்ளிட்ட காவலர்கள் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments