சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்ட குழு ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
குறைந்தபட்ச பென்ஷன் ரூ 7750 வழங்கப்பட வேண்டும்.
ஓய்வுபெறுபவர்களுக்கு SPF, PF மற்றும் ஒட்டு மொத்த தொகை வழங்க வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பரமசிவம் கணபதி சின்னசாமி கோவிந்தசாமி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments