கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டவர்களுக்கு காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கல்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சியில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்றதலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக ஏடி ஆடிட்டர், மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபானி,சண்முகசிகாமணி,மருத்துவர் செளமியா கலந்துகொண்டனர்.
முகாமில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
பின்னர் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு காய்கறிகள்,மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் சுகாதார ஆய்வாளர் தேவகிருஷ்ணன், செவிலியர் ஷீலா, துணைதலைவர் ஆகாசதுரை, வார்டு உறுப்பினர்கள், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், சத்துணவு ஆசிரியர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments